Skip to main content

“அதிமுக - பாஜக இடையே மறைமுக கூட்டணி” - திருமாவளவன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024

 

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில்  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டதில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசுகையில், “நானும் ஒரு வேட்பாளர். என்னுடைய பிரச்சாரத்தை இன்னும் சரிவர முடிக்கவில்லை என்றாலும் கூட, திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் சேகர்பாபுவின் அன்புக்கும் கட்டுப்பட்டு இந்த மேடையில் நிற்கிறேன். திமுக 40 தொகுதிக்கு நாற்பதும் வெற்றி பெறுவது நிச்சயம்  என்பதில் மாற்றுக்கருத்தில்லை.  அதிமுகவை வீழ்த்துவது திமுகவிற்கு எளிது.  அப்படி அதிமுக, பாமக, பாஜக என அனைவரும் கூட்டணியில் இருந்த போதே, வீயூகம் அமைத்து வெற்றி வாகை சூடியவர் முதல்வர் ஸ்டாலின்.

இந்த சூழ்நிலையில்  இந்த கட்சிகள் தனித்து  கூட்டணி  அமைத்து தற்போது களம் காணுகிறார்கள். அனால் அவர்களுக்கு தெரியாதா என்ன?  அனைவரும் சேரந்து கூட்டணி வைத்தே போதே தோற்றுப்போனோம். தற்போது தனித்து  களம் கண்டால் தோற்றுப் போவோம் என தெரியாதா? இருந்த போதிலும் தெரிந்தும், பாஜக வியூகத்தில் கூட்டணி அமைத்து களம் காணுகிறார்கள். சென்றமுறை அதிமுகவிற்கு விழவேண்டிய வாக்கை திமுக பெற்றது.

அதற்கு காரணம் அதிமுக பாஜக கூட்டணியே. அதனால் இந்த முறை அதிமுக, பாஜகவை கழட்டிவிட்டு நிற்கிறார்கள். ஆனால் அதுவும் இவர்களுக்குள்ளே மறைமுக  கூட்டணிதான். அதனால்தான் எடப்பாடி மோடியை எதிர்க்கமாட்டார். எதிர்த்து எந்த இடத்திலும் பேச மறுக்கிறார். மோடி பிரதமரானதில் இருந்து இன்று வரை, அவர் போட்ட கையொப்பம் அதானிக்கும், அம்பானிக்கும் தானே தவிர, இந்த மக்களுக்கில்லை. இதையெல்லாம் ஏன் எடப்பாடி பேச மறுக்கிறார். வரி ஏய்ப்புக்கு யார் காரணம்? ஜிஎஸ்டி சட்டம் வர யார் காரணம்? நீட் வர யார் காரணம்? இதையெல்லாம் கொண்டுவந்து மக்களை சிரமப்படுத்தியவர் மோடிதான் என எடப்பாடி பேச மறுப்பது ஏன் ?

இதற்கெல்லாம் குரல் எழுப்பியவர் திமுக தலைவர். இந்திய கூட்டணிக்கு வரமாட்டடேன் என்றவர்களை ஒருங்கிணைத்து அமரவைத்தவர் முதல்வர் அவர்கள். எதற்காக இந்த கூட்டணி என்றால் இந்திய அரசியலமைப்பை காக்கவும், சமத்துவத்தை நிலைநிறுத்தவும், இந்த கூட்டணியை உருவாக்கி களம் காண்கிறோம். இவ்வளவு நெருக்கடியிலும் இந்த கூட்டணியை உருவாக்க காரணம் இதுதான். நாட்டு மக்களைப் பாதுகாக்கலாமா வேண்டாமா, இந்த சமூகத்தை பாக்கணுமா? வேண்டாமா? இது ஒரு கருத்துரிமைக்கான தேர்தல். பாசிசத்தை வேரறுக்க வேண்டிய தேர்தல். ஆகையால் இதை வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும்.

இட ஒதுக்கீடு மூலம் பயன்பெறும் மக்களின் மீது கை வைக்காமல் தடுக்கவேண்டுமானால் முதல்வர் சொன்ன 40க்கு 40 வெற்றியை நிலைநிறுத்த வேண்டும். இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்கும் பாமக ராமதாஸ், அதே இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறுத்த வேண்டும் என துடிக்கின்ற மோடியுடன் கூட்டணி வைப்பது. இந்த சமூக மக்களை  அவர்களின்  வீடுகளிலே தாமரை சின்னத்தை வரைய செய்வது. அந்த சமூக மக்களை முட்டளாக மாற்றுவதாகத்தானே அர்த்தம். ஆனால், அதே சமூக மக்களுக்காக நாங்கள் தான் போராடுகிறோம். அவர்கள் எங்களுக்குத்தான் ஆதரவு தரவேண்டும். இதிலிருந்து மக்களை, சனநாயகத்தை , அரசியமைப்பு சட்டத்தை காப்பாற்ற  வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.