Advertisment

க்யூ ஆர் கோடு டிஜிட்டல் பிரச்சாரத்தில் திருமாவளவன்!

Thirumavalavan promote digitally through QR code!

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மக்களை சந்தித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் முறையில் புதியதாக பிரச்சார செய்யும் வழியினை கையிலெடுத்துளார்.பொது மக்களையும், இளைஞர்களையும்அதிகளவில்சென்று சேரும் விதமாக விசிக வினர், க்யூ ஆர் கோடு மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.‌

Advertisment

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் காணப்படும் கியூ ஆர் கோடை செல்போனில் பார்க்கும்போது திரையில் திருமாவளவன் தோன்றி, இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவம், மக்களிடம் தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும், தனக்கும் தொகுதிக்கான உறவுகள் குறித்து பேசுகிறார்.

Advertisment

Thirumavalavan promote digitally through QR code!

திருமாவளவன், ஞாயிற்றுக்கிழமை தொகுதிக்குட்பட்ட வேப்பூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அங்கு ஒட்டப்பட்டிருந்த க்யூ ஆர் கோடை தங்களின் செல்போனில் இயக்கி பரிசோதித்தனர்.

அப்போது திரையில் திருமாவளவன் தோன்றி பிரச்சாரம் செய்தவுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் தனது செல்போனில் இயக்கி வீடியோ பார்த்து மகிழ்ந்தார். மேலும் இப்பிரச்சாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து திருமாவளவனிடம் கேட்டு வியந்தார்.

Chidambaram Thirumavalavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe