Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று (24/03/2021) சென்னையில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமன் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,"சினிமாவில் கிடைத்த புகழை அரசியலில் அறுவடை செய்ய குஷ்புமுயற்சிக்கிறார். பா.ஜ.க. வேட்பாளர் குஷ்புவினால் கருத்தியல் ரீதியாக வெல்ல முடியாது. தமிழகத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செய்தது உண்மையில் மோடிதான்" என்றார்.