Advertisment

மோடியை வீழ்த்தும் பானை... குறுந்தட்டை வெளியிட்ட திருமாவளவன்

சிதம்பரம்(தனி) மக்களை தொகுதிக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

thirumavalavan

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை காலை சிதம்பரம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பு.முட்லூர் என்ற இடத்தில் பிரச்சாரத்தை துவக்கினார். இதனை தொடர்ந்து மேட்டுக்குப்பம், ஆதிவராக நத்தம், ஆயிபுரம், குறியமங்கலம், கீழமணக்குடி, அருண்மொழிதேவன், வல்லம், சேந்திரகிள்ளை, சிலம்பிமங்கலம்,சின்னாண்டிக்குழி, சாமியார்பேட்டை, புதுப்பேட்டை, கொத்தட்டை,கரிக்குப்பம்,பரங்கிப்பேட்டை, கிள்ளை,தில்லைவிடங்கன், கீழச்சாவடி, பிச்சாவரம், குமாரமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக பரப்புரை தொடங்கியபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் பரப்புரைக்கான குறு தகடனா ‘மோடியை வீழ்த்தும் பானை’ என்ற குறுந்தட்டை வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்கினார்.

இவருடன் திமுகவை சேர்ந்த திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கிள்ளைரவீந்திரன், புவனகிரி தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன், ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி, சிதம்பரம் நாடளுமன்ற தொகுதி பொருப்பாளர் செல்லப்பன், மதிமுக மாவட்ட செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட கூட்டனி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உடன் இருந்தனர்.

loksabha election2019 vck thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe