திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புதனன்று காட்டுன்னார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்பேட்டை, வடக்கு கொளக்குடி, உத்திரசோலை, காட்டுமன்னார்கோவில், ராஜாசூடாமணி, குப்பங்குழி, அழிஞ்சிமங்கலம், ஆழங்காத்தான், ஆயங்குடி, உத்திரசோலை, கீழகடம்பூர், மேலகட்ம்பூர், ஆதனூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பெரியகுளம், வடகரை கிராமங்களில் வயலில் கூலிவேலை செய்துகொண்டிருந்த பெண்கள் இவர் வாக்கு கேட்டு வருவதை அறிந்து வாகனத்தை நோக்கி வந்தனர். இதனையறிந்த அவர் வாகனத்தை நிறுத்த சொல்லி கீழே இறங்கி அவர்களிடத்தில் உரையாடினார். இது அன்பு கலந்த நெகிழ்வாக இருந்தது.
பின்னர் அங்குகூடியிருந்தவர்களிடம் பேசிய அவர், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை தோற்கடிக்க பாஜக, அதிமுக பல நூறுகோடிகளை செலவு செய்ய கங்கனம்கட்டிகொண்டு செயல்படுகிறார்கள். பாஜகவின் முகத்திரையை கிழித்த பங்கு விடுதலை சிறுத்தைகளுக்கும் உண்டு. எனவே திருமாவளவனை தோற்கடிக்க தீவிரமாக செயல்படுகிறார்கள். ராகுல், ஸ்டாலின் கரங்களை வலுபடுத்த ஒடுக்கப்பட்டோர்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒளிக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.