Advertisment

ஊழல் முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  போராட்டம்

struggle

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் எல்ராம்பட்டு ஊராட்சியில் 2013-14 ஆம் ஆண்டில்இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டங்களில்நடைபெறும் முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க கோரியும் பிரதமரின் கிஷான் திட்டத்தில் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் இடைதரகர்கள் மூலம்நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும் தொடர்புடைய நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எல்ராம்பட்டு கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு நடைபெற்றது.

Advertisment

இதில் கிளை துணை செயலாளர் வடமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Advertisment

struggle cpi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe