அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை தான் என எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமை தான் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறிமாறி அணி திரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் நியமிக்கப்படுவாரா என்று நாளை நடக்கவிருக்கும் பொதுக்குழுவில் தெரிந்துவிடும் என்ற பட்சத்தில், எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பல்வேறு நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் தொடர்ந்து ஓபிஎஸ்ஸை ஆதரித்து வந்த தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் வேளச்சேரி அசோக் திடீரென பல்டியடித்து எடப்பாடிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேளச்சேரி அசோக் அவரது ஆதரவாளர்களுடன் பேண்ட் வாத்தியம் முழங்க எடப்பாடி பழனிசாமியின் வீட்டை நோக்கி படையெடுத்தார். அதேபோல் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்பொழுது அதிமுக நிர்வாகிகள் கொண்டுவந்த போட்டோ ஃபிரேமில் கழக பொதுச்செயலாளர், மூன்றாம் புரட்சித்தலைவர் எடப்பாடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment