மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் அமேதியிலும், கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். இன்று வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Advertisment

priyanka

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

வயநாடு தொகுதியில் உள்ள மனன்தவாடே நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி, தனது அண்ணன் ராகுல் காந்தியை, பிரதமர் மோடி விமர்சிப்பது பற்றி பேசினார். அப்போது அவர், “நான் பிறந்ததிலிருந்து தெரிந்த ஒருவரின் சார்பாக உங்கள் முன் இங்கு நிற்கிறேன். இந்த தேர்தலில் அவர் உங்கள் தொகுதியின் வேட்பாளராகவும் நிற்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அவரது எதிரிகளிடமிருந்து நிறைய தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டவர். அதேபோல் அவர்கள் அவரை உணமையிலிருந்து மிகவும் தொலைவில் உள்ள ஒரு நபராக அவரை சித்தரிக்க முயற்சித்து வருகிறார்கள்” என்று பேசினார்.