ADVERTISEMENT

“லவ் லெட்டரா அனுப்பியுள்ளார்கள்; சி.வி. சண்முகம் இந்த ஐடியாவை கொடுத்திருப்பார்” - சீண்டும் புகழேந்தி

09:31 PM Jan 01, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேர்தல் நேரங்களில் மக்களின் சிரமங்களைக் குறைக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நடைமுறைக்குக் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்துகளைக் கேட்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 16ல் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இது குறித்து கருத்துகளைத் தெரிவிக்க அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்காக அதிமுகவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கடிதத்தை அதிமுக தலைமைக் கழகம் ஏற்க மறுத்துள்ளது. மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில்லை எனக் கூறி தலைமைக் கழக நிர்வாகிகள் இக்கடிதத்தை வாங்காமல் திருப்பு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் ஆணையர் அதிமுக கழகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் இவர்கள் எவ்வளவு பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்கள். சி.வி சண்முகம் இந்த ஐடியாவை கொடுத்திருப்பார் என நினைக்கிறேன். அரசு அனுப்பிய கடிதம் வந்தால் வாங்கி படியுங்கள், அதற்கு பதில் கொடுங்கள். நாங்கள் எல்லாம் வாங்க முடியாது எனக் கூறியுள்ளார்கள். அவர்கள் என்ன லவ் லெட்டரா அனுப்பியுள்ளார்கள்.

இது குறித்து செய்தியாளர்கள் தேர்தல் ஆணையரிடம் கேட்டபோது “கடிதத்தை நான் அனுப்பவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தைத்தான் நான் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்” எனக் கூறியுள்ளார். இவர்கள் கடிதத்தைத் திரும்ப அனுப்பாமல் இருந்திருந்தால் முடிவு இவ்வளவு நகைச்சுவையாக சென்றிருக்காது.

அதிமுகவை வழி நடத்தக்கூடிய அதிகாரம் படைத்தவர் ஓபிஎஸ்தான். இதை மிகத் தெளிவாக சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT