Advertisment

என்னிடம் பா.ஜ.க.வினர் பேரம் பேசினார்கள்! - காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

பேரம் பேசுவதைத்தான் பா.ஜ.க. காலங்காலமாக வேலையாக செய்து வருகிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

Rajegowda

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை இடங்களை எந்தக் கட்சியும் பெற்றிருக்காத நிலையில், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கின்றன. ஆனால், 104 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் பா.ஜ.க. தங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிவருவதாக காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த.வினர் குற்றம்சாட்டினர். தங்கள் எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ.க.வினர் ரூ.100 கோடி வரை பேசிவருவதாக ம.ஜ.த. தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ராஜெகவுடா தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘பா.ஜ.க.வினர் தொடர்ந்து எங்களிடம் பேரம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை பொருட்படுத்தவில்லை. எனக்கு தொடர்ந்து அழைப்புவிடுத்து தொந்தரவு செய்யவேண்டாம் என அவர்களிடமே நான் தெரிவித்துவிட்டேன். நான் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக நடப்பவன். பா.ஜ.க.வினர் தொடர்ந்து காலங்காலமாக பேரம் பேசி வருகிறார்கள். அதுதான் அவர்களுக்கு தொழிலே’ என கூறியுள்ளார்.

congress JDS karnataka election karnataka verdict
இதையும் படியுங்கள்
Subscribe