Advertisment

மோடிக்கு மாற்றான தலைவர் யாரும் இல்லை, பாஜக மீது மக்கள் மத்தியில் எந்த வெறுப்பும் இல்லை: அன்வர்ராஜா

மோடிக்கு மாற்றான தலைவராக இந்தியாவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. பா.ஜ.க. அரசு மீதும், தமிழக அரசு மீதும் மக்கள் மத்தியில் எந்த வெறுப்பும் இல்லை என்று ராமநாதபுரம் அதிமுக எம்.பி. அன்வர்ராஜா கூறியுள்ளார்.

Advertisment

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதா வழியில் அரசியல் மிகவும் சாணக்கியத்தனத்தால் சாதுர்யமாக பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி உருவாக்கி உள்ளனர்.

Advertisment

Anwar Raja

ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு கொள்கைகள் உண்டு. அந்த கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். இது தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே. அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் வெற்றி மட்டுமே குறிக்கோள். அதற்காகத்தான் அ.தி.மு.க. இந்த மெகா கூட்டணியை அமைத்துள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு மீதும், தமிழக அரசு மீதும் மக்கள் மத்தியில் எந்த வெறுப்பும் இல்லை. பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவராக இந்தியாவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. எனவே மத்தியில் பா.ஜ.க. அரசு தொடரவேண்டும். மாநிலத்தில் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும். அதற்காகவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியை நான் எதிர்ப்பதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதில் எள்ளளவும் உண்மை இல்லை. இவ்வாறு கூறினார்.

elections parliment aiadmk admk anwar raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe