“There is no action in Tamil Nadu; We have brought it to the attention of the Home Minister” - EPS in Delhi

Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக சந்தித்து பேசினார். சந்திப்பின் போது பல்வேறு கோப்புகள் பழனிசாமி தரப்பில் இருந்து அமித்ஷாவிடம் சமர்ப்பித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழகத்தில் கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் நடந்தாய்வாழி காவிரி என்ற திட்டத்தையும் வேகமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகம் முழுவதும் தடையின்றி போதை பொருள் கிடைக்கின்றது. இதனால் மாணவர்கள் இளைஞர்கள் சீரழியக்கூடிய நிலை இருக்கிறது. இதை ஏறக்கனவே சட்டமன்றத்தில் பேசினோம். அறிக்கையின் வாயிலாக தெரிவித்தோம். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

Advertisment

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துவிட்டது. அதையும் சுட்டி காட்டி இருக்கின்றோம். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் தெரிவித்துள்ளோம். அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை” என கூறினார்.