Advertisment

“மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது” - செங்கோட்டையன் பேட்டி

 'There has been a change of heart among the people' - Sengottaiyan interview

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமானசெங்கோட்டையன் கூறியுள்ளார்.

Advertisment

அவர் ஈரோடு பெரியார் நகரில் அதிமுக ஊழியர் கூட்டத்தில் 24ந் தேதி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தாலிக்குத்தங்கம், ஸ்கூட்டி, லேப்டாப், இலவச மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு வழங்கல் உட்பட பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisment

அதிமுக அனைத்து துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டது. திமுகவின்தேர்தல் அறிக்கையில்சொல்லப்பட்ட மகளிருக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்டவாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று” என்றார்.

Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe