சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையானதையடுத்து நேற்று (08.01.2021) பெங்களூருவில் இருந்து புறப்பட்ட நிலையில், சசிகலாஇன்று காலை சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் இல்லை.ஆனால் அதிமுகவிலும்சிலஎட்டப்பன்கள்இருக்கத்தான் செய்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.அதற்குப் பதிலளிக்கும் வகையில்சென்னையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தடி.டி.வி.தினகரன்,''அதிமுகவில் இன்னமும் ஸ்லீப்பர் செல்கள்இருக்கிறார்கள். ஸ்லீப்பர் செல்கள்எம்.எல்.ஏவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிமுகநிர்வாகியாகக் கூடஇருக்கலாம்.அதிமுக பொதுக் குழுவைக் கூட்டவோ, கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது.
சசிகலாவின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று என்னை தொடர்புகொண்டு ஃபோனில் நலம் விசாரித்தார்.வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளேன். ஆர்.கே.நகர் தொகுதியிலும்,தேனியில்ஒருதொகுதியிலும் போட்டியிடுவேன்''என்றார்.