Advertisment

“உலகில் மொத்தமே 500 தான் உள்ளது; உயிருள்ளவரை இது என்னுடன் தான் இருக்கும்” - அண்ணாமலை

“There are only 500 in the world; It will be with me as long as I live” - Annamalai

Advertisment

நான் தேசியவாதி. பிரிவினை பேசுபவன் அல்ல. அதனால் என் உடலில் உயிருள்ளவரை இந்த வாட்ச் என்னிடம் தான் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் தனியார் ஓட்டலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இப்பொழுது அரசியல் கட்சியில் இருப்பவர்களின் உடைகள், அவர்கள் செல்லும் கார்கள் போன்றவற்றை வைத்து புதிதாக ஒப்பீடு செய்கிறார்கள். ரபேல் விமானத்தின் பாகங்களை வைத்து 500 கைக்கடிகாரங்கள் செய்தார்கள். அது பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. அந்த வாட்ச்களின் பெயரே ‘ரபேல் ஸ்பெஷல் எடிசன்’ என்பது தான். ரபேல் விமானத்தில் எந்தெந்த பாகங்கள் இருக்கிறதோ நான் கட்டியிருக்கும் வாட்சிலும் அந்த பாகங்கள் உள்ளது. நான் ஒரு பெரிய தேசியவாதி. ரபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. ரபேல் விமானத்திற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய இந்த வாட்சினை கட்டியுள்ளேன்.

500 வாட்ச் செய்யப்பட்டதில் என் வாட்ச் 149 ஆவது வாட்ச். இந்த ரபேல் வாட்ச்சைஇந்தியர்கள் தான் வாங்குவார்கள். ரபேல் நிறுவனத்தின் பாகங்களுடன் விமானத்தை தயாரித்த நிறுவனம் செய்த வாட்சினை கட்டியுள்ளேன். என் உடம்பில் உயிர் உள்ளவரை என் உடம்பில் இந்த வாட்ச் என்னிடம் இருக்கும்.ஏனென்றால் நான் தேசியவாதி. பிரிவினை வாதம் பேசுபவன் அல்ல.

Advertisment

ரபேல் விமானத்தின் முதல் விமானம் வந்துவிட்டது. அதன் பயன்பாடுகளைப் பாருங்கள். இந்தியாவின் எதிரிகள் இந்தியாவிற்குள்ளேயே இருக்கிறார்கள். சில கட்சிகளுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள். சீனா, பாகிஸ்தானின் ஏஜெண்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பாக, இந்தியா பாதுகாப்பில் தன்னிறைவைப் பெறக்கூடாது என்பதற்காக வெளிநாடுகளின் ஒற்றர் போல் நாட்டில் இருந்து பேசுகிறார்கள். அவர்களுக்கு என் பதில், இந்தியா முன்புமாதிரி இல்லை. இது மோடியின் இந்தியா. அடித்தால், இந்தியா திருப்பி அடிக்கும்” எனக் கூறியுள்ளார்.

Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe