There are so many constituencies for BJP ... OPS congratulated BJP!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில்பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளைஅதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜகதொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று (05.03.2021) கையெழுத்தானது. முன்னதாகஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளதாக அதிமுகதெரிவித்துள்ளது. இந்நிலையில் துணைமுதல்வர்ஓபிஎஸ், பாஜகவிற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

அதேபோல் அதிமுக - தமாகாகூட்டணியில் தமாகாவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சைக்கிள் சின்னத்தில் போட்டியிட 12 தொகுதிகள் வேண்டும் என அதிமுகவிடம் தமாகா கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.