Advertisment

கட்சிக்கு விரைவில் நிலையான சின்னம்- டிடிவி. தினகரன் பேச்சு!

தேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் பழனி செட்டிப்பட்டியில் உள்ள சந்திர பாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அம்முக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர். சரஸ்வதி மற்றும் மாவட்ட செயலாளர் முத்துச்சாமி உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசும் போது, எங்கள் கட்சியில் இருந்து தற்போது பிரிந்து சென்ற தங்க தமிழ்செல்வனை நாங்கள் கட்டாயப்படுத்தி வெளியே போகச் சொல்லவில்லை.

Advertisment

THENI AMMK PARTY MEETING  TTV DHINAKARAN SPEECH

அவராகவே பிரிந்து சென்று விட்டார். தனது பரம்பரை அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு, தற்போது திமுகவில் சேர்ந்து உள்ளது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. இனி வரும் காலங்களில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் சரி, உள்ளாட்சி தேர்தலிலும் சரி, அமமுக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. அதில் அமமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தமிழகத்தில் மிகச்சிறந்த கட்சியாகவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவருடைய கனவை நிறைவேற்றும் விதமாக அவருடைய ஆட்சியை தர கூடிய சிறந்த கட்சியாக அமமுக செயல்படும்.

அதுபோல் எங்கள் கட்சியில் அனைவருமே சுதந்திரமாக செயல்படுகிறார்கள் மற்றவர்களைப் போல கூனிக்குறுகி பிறகு ஜால்ரா அடித்து செயல்படும் கட்சி அல்ல. விரைவில் அமமுகவிற்கு நிலையான சின்னத்துடன் சுதந்திரமாக செயல்படுவோம் என்று கூறினார்.

Speech Meeting AMMK PARTY LEADER Theni Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe