Skip to main content

''அப்போவே எடப்பாடி கிட்ட சொன்னேன்... என் பேச்சை அவர் கேட்கல''-ராஜேந்திர பாலாஜி பேச்சு!

Published on 24/09/2022 | Edited on 25/09/2022

 

"Then I said to Edappadi... He won't listen to me" - Rajendra Balaji speech!

 

தமிழகத்தில் என்ன ராஜபக்சே ஆட்சியா நடக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

 

விருதுநகரில் நடைபெற்ற அதிமுக கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ''திமுக ஆட்சியில் இன்று ரொம்ப அகம்பாவம் நடந்து கொண்டிருக்கிறது. யாராவது எதிர்த்து பேசினால் புடிச்சு உள்ள போடு... என்ன ராஜபக்சே ஆட்சியா நடக்கிறது இங்கே. எல்லோரையும் மிரட்டி பார்க்க முடியுமா? எல்லாரையும் மிரட்டினால் படிஞ்சுருவாங்களா? என்ன செய்திட முடியும் உன்னால. எத்தனை நாள் புடிச்சு உள்ள வச்சுற முடியும். இதற்காக பயப்பட கூடியவன் அண்ணா திமுக தொண்டன் கிடையாது. மிட்டா மிராசுதாரர்களை பார்த்து, ஆலை அதிபர்களை பார்த்து அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பிக்கவில்லை. ஒட்டிய வயிறோடு, கிழிந்த சட்டையோடு உழைக்கின்ற வர்க்கம் இருக்கிறானே உழைப்பாளி, பாட்டாளி, விவசாயி அவனுடைய வாழ்க்கைத்தரம் உயர்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அதிமுக.

 

இந்த மேடையில் சொல்கிறேன் மெடிக்கல் காலேஜ் கொண்டு வந்தேன், ஆர்ட்ஸ் காலேஜ் கொண்டு வந்தேன், அருப்புக்கோட்டையில் ஒரு ஆர்டிஓ ஆபீஸ், சிவகாசியில் ஒரு ஆர்டிஓ ஆபீஸ் கொண்டு வந்தேன், வெம்பகோட்டையில் ஒரு தாலுகா ஆபிஸ், சாத்தூரில் ஒரு கோட்டாட்சியர் அலுவலகம், வத்திராகுடியிருப்பில் ஒரு வட்டாட்சியர் அலுவலகம். இப்படி எவ்வளவு கொண்டு வந்தோம். நீங்கள் கொண்டு வந்த எதையாவது ஒன்று சொல்லுங்கள். எல்லா ரோடும் நாங்க தான் போட்டோம். விருதுநகரில் ஜிஹெச் ஹாஸ்பிடல் நான் தான் பூமி பூஜை போட்டேன். நாங்க பார்த்து பார்த்து கட்டினோம். அதற்கெல்லாம் வெள்ளை அடிச்சு கல்வெட்டு வச்சிருக்காங்க. எடப்பாடியார் கிட்ட தேர்தலுக்கு இரண்டு மாதத்துக்கு முன்னாடியே சொன்னேன் 11 மெடிக்கல் காலேஜ்காக பில்டிங் எல்லாம் நாம கட்டி இருக்கோம். அதையெல்லாம் நாம் திறந்து வைத்துவிடுவோம் என்று, ஆனால் அவர் என் பேச்சை கேட்கல. பாலாஜி நாமதான் ஆட்சிக்கு வர போறோம். வந்ததுக்கு பின்னாடி எல்லா இடத்திலும் மீண்டும் அங்கேயே பங்க்ஷன் வச்சு பொதுமக்கள் முன்னாடி திறந்து வைப்போம் என்றார். எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் 10 வருஷம் ஆட்சியில் இருக்கிறோம் பொதுமக்கள் எதாவது மாற்றத்தை விரும்பினால் போச்சு என. ஆனால் நானே தோற்பேன் என்று எனக்கு தெரியாது. என்னை தோக்கடிப்பதற்காக திமுக ஒரு டீமை சென்னையில் இருந்தே கொண்டு வந்துடுச்சு. நான் என்ன செய்ய... மிகப்பெரிய டீமையே போட்டு விட்டாங்க. மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள் ஆனால் இப்பொழுது ஏமாற்றப்பட்டு நிற்கிறார்கள். நீட் தேர்வவை ஒழித்து விட்டார்களா? முதல் கையெழுத்து போடுவதற்கு பேனா இல்லையா? எழுதாத பேனா, மையில்லாத பேனாவிற்கு 80 கோடி ஒதுக்குகிறீர்கள் அதற்கு மத்திய அரசிடம் போய் போராடி அனுமதி வாங்குறீங்களே முதலில் நீட் தேர்வு விலக்கிற்கு அனுமதி வாங்குங்க'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரிஷாவின் கண்டனம்; சில மணிநேரத்தில் வீடியோ வெளியிட்ட ஏ.வி. ராஜு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Trisha's Condemnation; AV released the video within an hour. Raju

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

mm

இந்நிலையில் ஏ.வி.ராஜு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும்” - த்ரிஷாவிற்கு ஆதரவாக ஃபெப்சி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
fefsi about trisha admk member issue

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்ட நிலையில், சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அங்கு பல சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுகவின் முன்னாள் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி. ராஜு தற்போது குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சேரன், “வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலையும், பொருளாளர் கார்த்தியையும் டேக் செய்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் ஃபெப்சி இந்த விவகாரம் தொடர்பாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய சமூக வலைத்தளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜீ என்பவர் திரைத்துறை குறித்து சில தரமற்ற, அவதூறுகளைக் கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்பந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸையும் சம்பந்தப்படுத்தி இந்த கீழ்த்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளைத் திரையுலகப் பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக முர்மு வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் ‘பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்’ நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குப் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.