This is their policy; Kanimozhi MP

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் அன்று பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலையில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

Advertisment

திருப்பூர் மாவட்டம், வெல்லக்கோவில் அருகே நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “கூட்டணி மாறுவதுகுறித்துபேசஅதிமுகவினருக்குதகுதி கிடையாது.பதவியைகாப்பாற்றிக்கொள்வதே எடப்பாடி பழனிசாமி பிராதான கொள்கையாக வைத்துள்ளார். அம்மையார் ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்துகிறோம்எனத்தொடர்ந்து பேசிவருகிறார்கள். ஆனால், அவர் மரணத்தில் பல கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம்தான் கேள்வி எழுப்பினார். துணை முதல்வர் ஆனதும் ஜெயலலிதாவை மறந்துவிட்டார்”எனப்பேசினார்.

Advertisment