Advertisment

நல்லாட்சி தொடர வாக்களித்த மக்களுக்கு நன்றி! -ராமதாஸ் 

ttttt

Advertisment

தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் பெருவாரியான மக்கள் அதிமுக & பாமக அணிக்கு வாக்களித்திருப்பது உறுதியாகிறது. தமிழ்நாட்டில் நல்லாட்சியின் வெற்றி நடை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 16-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி இரவு 7.00 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் வந்து ஜனநாயகக் கடமையாற்றியுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்த இரவு 7.00 மணி நிலவரப்படி தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சராசரியாக 70 விழுக்காட்டுக்கும் கூடுதலான வாக்குகள் பதிவாகியுள்ளன. பல வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. துல்லியமான வாக்குப்பதிவு அளவு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகக் கூடும். வாக்குப்பதிவின் அளவு, வாக்காளர்களின் உடல் மொழி, மக்களின் மனநிலை ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது தமிழ்நாடு நல்லவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் பெருவாரியான மக்கள் அதிமுக & பாமக அணிக்கு வாக்களித்திருப்பது உறுதியாகிறது.

Advertisment

தமிழ்நாட்டில் நல்லாட்சியின் வெற்றி நடை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், அதிமுக தலைமையிலான அணியின் வேட்பாளர்களுக்காக மிகச் சிறந்த முறையில் களப்பணியாற்றிய அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும், ஆதரவு தந்த அமைப்புகளுக்கும் பா.ம.க. சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

admk pmk tn assembly election 2021 Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe