actor Ramarajan

Advertisment

சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் நடிகர் ராமராஜன்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில நாட்களுக்கு முன் கரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற அச்சத்தால் கிண்டியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தேன்.

அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியதோடு, அனைவருக்கும் உயர்ந்த சிகிச்சை கிடைக்கும் வகையில் செயலாற்றுகின்றனர்.

Advertisment

இதற்காக முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் நன்றி. எனக்கு சிகிச்சை முடிந்து விட்டுக்கு வந்து விட்டேன். எனக்காக பிரார்த்தனை செய்த அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் நன்றி”இவ்வாறு கூறியுள்ளார்.