Advertisment

அனைவருக்கும் நன்றி... நடிகர் கருணாஸ்

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான நடிகர் கருணாஸ், தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் சங்கத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் 23.6.2018 அன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்கு தொடங்கி விறு விறுப்புடன் நடைபெற்று மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது.

actor Karunas

இத்தேர்தலில் வாக்களித்த நாடக நடிகர்கள் சங்கமான மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மன்னார்குடி, கோவை, வேலூர், திருவண்ணாமலை, மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்து வாக்களித்த அனைத்து நாடக நடிகர் சங்கத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

குறிப்பாக வெளியூரிலிருந்து தபால் வாக்கு பதிவு செய்த கலைஞர்களுக்கும், கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தபால் ஓட்டு பதிவு செய்தோர் அனைவர்க்கும் நன்றி!

பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு நடைபெற்று முடிந்த நடிகர் சங்கத் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக இருந்து பணியாற்றினார்.

அனைத்தையும் கடந்து இத்தேர்தலை சட்டபடியாக நடத்த உத்திரவிட்ட நீதிமன்றம், இறுதிவரை தேர்தல் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை சிறுப்புற செய்த தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

thanks nadigar sangam election actor karunas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe