பல்வேறு வகையானமோதல்களுக்குபிறகு கடந்த 11 ஆம் தேதிவானகரத்தில்இரண்டாவது முறையாக அதிமுகபொதுக்குழுகூட்டம் நடைபெற்று அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலபொதுச்செயலாளராகதேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்துஓபிஎஸ்மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி நீக்க, மறுபுறம் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களைஓபிஎஸ்நீக்கி வருகிறார். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Advertisment

rb

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமித்து எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ''திமுகவின் கையாலாகாத அரசை, கடந்த ஓராண்டு காலமாக சட்டமன்றத்தில் துள்ளி வருகின்ற வேலாக துளைத்து எடுக்கிற அந்த பணியை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இனி வருகிற காலங்களிலும் திமுகவின் நிர்வாககுளறுபடிகளையும், நிர்வாக சீர்கேடுகளையும், மக்கள் மீது அக்கறை இல்லாத நடவடிக்கைகளையும் தோலுரித்துக் காட்டுகிற பணியினை எடப்பாடி பழனிசாமி காட்டுகிற வழியில் செயல்பட வரலாற்று வாய்ப்பினை தந்ததற்கு கோடான கோடி நன்றி'' என்றார்.

Advertisment