Advertisment

ஜனநாயக முறைப்படி ராஜேந்திர பாலாஜி நாவை தி.மு.க அடக்கும் : தங்கம் தென்னரசு!

gggg

சென்னை நந்தனத்தில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த நிலையில், விருதுநகரில் தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

Advertisment

விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு பேசும்போது, “தேவர் சமுதாயத்தை தி.மு.க தலைவர் அவமதித்ததாகக் கூறும் ராஜேந்திர பாலாஜி, தன் சொந்தக் கட்சியைச் சார்ந்த தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவை மிரட்டுகிறார்

Advertisment

ராஜேந்திர பாலாஜிக்கு திராணிஇருந்தால், தி.மு.க தலைவரின் குற்றச்சாட்டிற்கு எதிராக வழக்குப் போட்டிருக்க வேண்டும். ராஜேந்திரபாலாஜி நாவை அடக்கவேண்டும், இல்லையெனில் ஜனநாயக முறைப்படி தி.மு.க அவர் நாவை அடக்கும்.

cnc

இந்திரா காந்திக்கே கறுப்புக்கொடி காட்டியது தி.மு.க.ராஜேந்திர பாலாஜி எம்மாத்திரம். எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களை அடக்கிவைக்க வேண்டும். இல்லையெனில் தி.மு.க திருப்பி அடிக்கும்” எனத் தெரிவித்தார்.

admk rajendra balaji Thangam Thennarasu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe