Advertisment

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது உறுதி: தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டி

thanga tamilselvan

அமமுக கொள்கைப்பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

Advertisment

அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறதே?

Advertisment

தேர்தல் வந்தால் அதனை சந்திக்க கட்சியும், சின்னமும் வேண்டும் என்று ஏற்கனவே டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தோம். மனுவை விசாரித்து அமமுக, குக்கர் சின்னத்தை வைத்துக்கொள்ள டெல்லி ஐகோர்ட் அனுமதித்தது. ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்றோம். இடைத்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க குக்கர் சின்னத்தை கேட்டோம். குக்கர் சின்னம் பதிவு செய்யப்படவில்லை என்றார்கள். விரைவில் பதிவு செய்து, மீண்டும் குக்கர் சின்னம் கேட்போம். குக்கர் சின்னத்தை பெறுவோம்.

ஏபிபி நியூஸ் - சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே...

கலைஞர்,ஜெயலலிதாஆகியோர் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் பெரிய தலைவர்கள் இல்லை. அனைத்துக் கட்சிகளும் புதிய கட்சிகள்தான். தேர்தலில் போட்டியிடுவோம். இறுதி எஜமானர்கள் மக்கள்தான். கருத்துக் கணிப்புகளெல்லாம் உண்மையாவதில்லை.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் அமமுக கூட்டணி வைக்குமா?

தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே எங்கள் துணைப்பொதுச்செயலாளர் சொல்லிவிட்டார். மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்.

எந்தக் கட்சிகளுடன் கூட்டணி?

மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்றால்தான், மாநில கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. தேசிய கட்சிகளுடன் இணைந்தால் பல்வேறு மாநில பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர முடியாது. இதனை சொல்லி சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒத்து வந்தால் கூட்டணி. இல்லையென்றால் அமமுக தனித்துப் போட்டியிடும்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறதே?

அதிமுகவுக்கு வேறு வழியில்லை. பாஜகவுடன்தான் கூட்டணி வைத்தாக வேண்டும்.

தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக பேசி வருகிறாரே?

தம்பிதுரை பேச்செல்லாம் எடுபடாது. நூற்றுக்கு நூறு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது உறுதி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இவ்வாறு கூறினார்.

Alliance parliment elections ammk aiadmk thanga tamilselvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe