சென்னையில் கடந்த மாதம் தங்க தமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தேனி அருகே உள்ள வீரபாண்டியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க. வில் இணையும் விழா மற்றும் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.

Advertisment

ops-thanga tamil selvan

இதில் தங்க தமிழ்செல்வன் பேசுகையில்,

ஸ்டாலினிடம் ஒரே ஒரு கோரிக்கையை வைத்து முடித்துக்கொள்கிறேன். ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக அரசு ஊழல் அரசு என்று சொன்ன முதல் ஆள் தங்க தமிழ்செல்வன். எடப்பாடி பழனிசாமி 5 லட்சத்து 5 ஆயிரம் கோடிக்கு ரோடு காண்ராக்டில் 1500 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று பேட்டி கொடுத்தவன் தங்க தமிழ்செல்வன். கடந்த இரணடு வருடமாக ஊடகங்களில் அதிமுக அரசைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் மக்கள் என்னை பார்த்து ரசித்தார்கள்.

எம்.ஜி.ஆர். குன்னூரில் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். தனக்கு பின்னால் திராவிட கட்சிகள்தான் தமிழ்நாட்டை ஆளும் என்று சொல்லியிருக்கிறார். ஸ்டாலினை மனதில் வைத்துதான் சொல்லியிருக்கிறார். ஸ்டாலின்தான் அடுத்த முதல் அமைச்சர் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.

Advertisment

எனக்கு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ எந்த பதவியும் வேண்டாம். நீங்க எம்எல்சியை மட்டும் கொண்டு வந்து, போலீஸ் துறையை மட்டும் என்கிட்ட ஒரு மாதத்திற்கு கொடுங்கள். ஒரே ஒரு மாதம்.அந்த துறையை என்கிட்ட கொடுத்தால், ஓ.பி.எஸ். குடும்பத்தில் இருந்து ஒரு வருஷத்துக்கு தமிழ்நாட்டு பட்ஜெட்டுக்கான 3 லட்சம் கோடியை நான் எடுத்துத் தருகிறேன். அதிமுக அமைச்சர்கள் வீட்டில் இருந்து வருஷம், வருஷம் ஒரு லட்சம் கோடி எடுத்துத் தருகிறேன். ஆதாரப்பூர்வமாக எடுத்துத் தருகிறேன். டிரெஷரிக்கு அந்த பணம் போகட்டும். முதலமைச்சர் பொது நிதிக்கு அந்த பணம் வரும். நீங்கள் அந்தப் பணத்தை எடுத்து மக்கள் நலத் திட்டத்துக்கு கொடுங்கள். இவ்வாறு பேசினார்.