Advertisment

தங்க தமிழ்ச்செல்வன் போடும் பிளான்: பதட்டத்தில் மகனுக்காக களம் இறங்கிய ஓ.பி.எஸ். 

வாரிசு அரசியல் என்று பேசி வந்த ஒ.பி.எஸ். தன் மகனுக்கு சீட்டு கொடுத்திருக்கிறாரே?ஊருக்கு தான் உபதேசம் தனக்கு இல்லை என்பதை காட்டிவிட்டார் என்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தேனி தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு எதிராக களம் இறங்க வேண்டும் என்று தங்கத் தமிழ்ச்செல்வன் உள்பட கட்சி நிர்வாகிகளிடம் விவாதித்துள்ளார்.

Advertisment

ops

ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வேறு வேட்பாளரை நிறுத்திவிட்டு, தேனியில் நீங்கள் நின்றால் என்ன என்று தங்கத் தமிழ்ச்செல்வனை அமமுகவினர் வலியுறுத்துகிறார்களாம். அதற்கு தங்கத் தமிழ்ச்செல்வனோ, அனுராதாவையோ (தினகரன் மனைவி) அல்லது விவேக்கையோ (இளவரசியின் மகன்) நிறுத்தினால் அமமுகவின் தொண்டர்களும் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். ஆண்டிப்பட்டியில் திமுக, அதிமுகவில் அண்ணன் தம்பி நிற்பதால்,தான் நின்றால்தான் சரியாக இருக்கும் என்று கூறுகிறாராம். அவர்கள் இருவரும் நிற்க விரும்பவில்லை என்றால் முன்னாள் அமைச்சர் துரைராஜ் மகன் தனசேகரனை நிறுத்தலாம் என்றும் தெரிவித்திருக்கிறாராம்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தினகரன் - தங்கத் தமிழ்ச்செல்வன் போடும் பிளானை அறிந்த ஓ.பி.எஸ்., நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட கையோடு மகனுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்தார். ஏற்கனவே வாரிசுக்கு சீட் என்று பேச்சு இருக்கிறது, அதிமுக வேட்பாளர்கள் சிலருக்கு பிரச்சாரம் செய்துவிட்டு, பின்னர் மகனுக்காக பிரச்சாரம் செய்யலாம் என்று உடனிருந்த அமைச்சர்கள் சிலர் கூறினார்களாம்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

வாரிசுக்கு சீட் கொடுக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கா? கட்சி பைலாவுல இருக்கா? அதையெல்லாம் காதில் போட்டுக்காதீங்கன்னு சொல்லிவிட்டு, இன்று காலை சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட பாலமேட்டில் முதல் நாள் பிரச்சாரத்தை ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏக்கள் எஸ்.டி.கே.ஜக்கையன் மற்றும் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வைத்துள்ளார்.

ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe