Advertisment

மகனை வெற்றிபெற வைக்க 1000 கோடி செலவு செய்ய ஓ.பி.எஸ். திட்டம்: தங்க தமிழ்ச்செல்வன்

தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறனர்.

Advertisment

ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட தங்க தமிழ்ச்செல்வன்,

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனதுமகனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.1000 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த பணம் பாதாளம் வரை பாய உள்ளது. அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டுகளை மட்டும் எங்களுக்கு போடுங்கள்.

o panneerselvam son Ravindranath Kumar Theni

Advertisment

தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.வினர் பணம் கொடுப்பதை தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர். ஆனால் மற்ற வேட்பாளர்களை மிரட்டி வருகின்றனர். இந்த தேர்தல் விதிமீறல் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்.

இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் எங்களுக்கு புதிதாக வழங்கிய சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டோம். எனவே எங்களுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது.

தேனி பாராளுமன்ற தொகுதி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க.வே அமோக வெற்றி பெறும். இவ்வாறு பேசினார்.

admk ammk O Panneerselvam Ravindranath Kumar son Thanga Tamil Selvan Theni
இதையும் படியுங்கள்
Subscribe