Advertisment

கேள்வி கேட்பதும் அறிவுரை கூறுவதும் தேச துரோகமா? தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. அறிக்கை

நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

நாடெங்கிலும் நடக்கும் கும்பல் படுகொலைகளையும், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக நடைபெறும் அச்சுறுத்தல்களையும் சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது, உ.பி. மாநிலத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

thamimun ansari

நாட்டின் மீதான கவலையில், கலைஞர்கள், படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி நியாயமான சில கேள்விகளை எழுப்பி, அறிவுரைககைளயும் எழுதி பிரதமருக்கு சுட்டிக்காட்டியிருப்பது எந்த வகையில் தேசத்துரோகமாகும்?

Advertisment

பிரதமருக்கு கடிதம் எழுதி, நாட்டின் நிலையை சுட்டிக் காட்டுவதே குற்றம் எனில், நாடு எதை நோக்கி செல்கிறது என்ற கவலை எழுகிறது.கருத்துரிமை என்பது குடிமக்களில் அடிப்படை உரிமையாகும்.

ஒரு ஜனநாயக நாட்டில், மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கிடும் போக்கினை அனுமதிக்க கூடாது.எனவே பீஹார் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

மாற்று கருத்துகளையும், ஆரோக்கியமான எதிர் விமர்சனங்களையும் சகித்துக் கொண்டு இயங்குவதே உண்மையான ஐனநாயகம் என்பதை மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் அழுத்தமாக சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Nagapattinam MLA THAMIMUN ANSARI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe