தமிழக அரசின் துணிச்சல் மிக்க நடவடிக்கை! தமிமுன் அன்சாரி பாராட்டு!

THAMIMUN ANSARI

தமிழக அரசின் துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டுகிறோம் என்றும.ஜ.க பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசுப் பள்ளிகளில் படித்த தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5சதவீத இட ஒதுக்கீடு வழங்க நேற்று தமிழக அரசு அரசாணை வழங்கியிருப்பதை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, கவர்னர் ஒப்புதல் வழங்காமல் தாமதித்த நிலையில், சமூக நீதியைக் காப்பாற்றும் வகையில் தமிழக அரசு இம்முடிவை மேற்கொண்டுள்ளதை துணிச்சலான நடவடிக்கை எனப் பாராட்டுகிறோம்.

இதற்கு எந்த ஆபத்தும் நேராத வகையில் தமிழக அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்'' எனக் கூறியுள்ளார்.

MLA THAMIMUN ANSARI
இதையும் படியுங்கள்
Subscribe