thamimun ansari - mla - NAGAPATTINAM -

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டிப்பது மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்கேயே காட்டுகிறது.

Advertisment

Advertisment

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 9 ஆயிரத்து 550 இடங்களில் 7 ஆயிரத்து 125 இடங்கள் பொதுப் பிரிவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு மொத்தமே 371 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அதாவது 3.8 சதவீத இடங்களே கிடைத்துள்ளது.

அரசியல் சாசன சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட இடஓதுக்கீட்டை மறுப்பது அப்பட்டமான சமூக அநீதியாகும்.இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் வலிமையான சட்ட நடவடிக்கைகளையும், களப்போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

இதில் உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு, அகில இந்திய இடஒதுக்கீடுகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.