THAMIMUN ANSARI

Advertisment

ம.ஜ.க. பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏவுமான மு.தமீமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகை உலுக்கி வரும் கரோனா தொற்றின் தாக்கம் இப்போது நம் நாட்டில் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

குறிப்பாக ஜூன் மாதத்தில் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது தான் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.

ஊரடங்கைப் பேணுவதிலும், வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதிலும் கொஞ்சம், கொஞ்சமாக அக்கறை இழக்கப்படுகிறதோ என்ற கவலை எல்லோருக்கும் உருவாகி வருகிறது.

Advertisment

ஒருவரையொருவர் சுய கட்டுப்பாடுகளின் மூலம் காப்பாற்றிக்கொள்ளக் கூடிய நிலை உள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.எனவே பொதுமக்கள் அனைவரும் இது குறித்துக் கூடுதல் பொறுப்புணர்வு காட்ட வேண்டிய தருணம் இது என்பதை வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு இவ்விஷயத்தில் மனித உயிர்களைப்பாதுகாக்கும் வகையில், கரோனா சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறைந்தது ஒரு வாரத்திற்கு முழுமையான ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும்.

http://onelink.to/nknapp

Advertisment

அப்படி அறிவிப்பதற்கு முன்பாக 48 மணி நேர அவகாசத்தை மக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், அப்பகுதிகளில் வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிட வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.