தமிழக சட்டப்பேரவைக்கு வந்த நாகை எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி, பதாகையை கையில் ஏந்தியபடி வந்தார்.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 09.01.2019ம் தேதி வந்த அவர், ''அமெரிக்காவே மத்திய கிழக்கில் போரை தூண்டாதே உலக அமைதியை குலைக்காதே'' என்று வாசங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி வந்தார். ஈரான் மீதான அமெரிக்காவின் போர் வெறியை கண்டித்தும், உலக அமைதியை வலியுறுத்தியும் இவ்வாறு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.