தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி இன்று கருப்பு உடை அணிந்து வந்திருந்தார். சட்டப்பேரவைக் கூடியதும், தனது கையில் தேசியக்கொடியுடன் வெளிநடப்பு செய்த தமிமுன் அன்சாரி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினார்.