thamimun ansari

திமுக தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

நக்கீரன் இணையதளத்தில் அவர் கூறியதாவது,

பழம்பெரும் அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

Advertisment

சமூக நீதி, மதச்சார்பின்மை, தமிழர் மேம்பாடு, மாநில உரிமைகள் உள்ளிட்ட அரசியல் கொள்கைகள் தூக்கி பிடிக்கும் திமுகவின் தலைவராக அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது அவரது உழைப்புக்கும், உணர்வுக்கும் கிடைத்த பரிசாகும்.தமிழகத்தின் நலன்களையும், இந்திய ஒன்றியத்தின் வளங்களையும் பாதுகாக்கும் அரசியல் கடமையை அவர் தலைமையில், பெரியார், அண்ணா, கலைஞர் வழியில், பேராசிரியர் அன்பழகன் துணையோடு திமுக தொடர்ந்து முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

Advertisment

மேலும், திமுக வின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் துரைமுருகனுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர்களை ஒரு மனதாக தேர்வு செய்த திமுக பொதுக் குழு உறுப்பினர்களுக்கும் எமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.