THAMIMUN ANSARI

Advertisment

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுக்க கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

நாகை கலெக்டர் அலுவலகம் வந்த மஜக பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி, போராட்டக்காரர்களை சந்தித்தார். இது தமிழகம் முழுக்க நடந்து வருவதாகவும், யாரும் தங்களை கண்டுக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

இது குறித்து சத்துணவு துறை அமைச்சர் சரோஜா கவனத்திற்கு கொண்டு சென்று, இக்கோரிக்கைகளை வலியுறுத்துவதாக கூறினார்.

Advertisment

அடுத்த 1 மணி நேரத்தில் அமைச்சருக்கு, அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, கடிதம் எழுதி அனுப்பி விட்டு, அதன் நகலையும் போராட்டகாரர்களுக்கு மஜக நாகை தெற்கு மாவட்ட செயலர் பரக்கத் அலி மூலம் கொடுத்தனுப்பினார்.