ஊரடங்கு நீட்டிப்புக்கு முன்பாக உரிய முன் ஏற்பாடுகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: தமிமுன் அன்சாரி

ஊரடங்கு நீட்டிப்புக்கு முன்பாக, உரிய முன் ஏற்பாடுகளில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று ம.ஜ.க. பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்.

mjk

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வரும் நிலையில், இக்கால கட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் அரசு உரிய கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கிறோம். முக்கியமாக பல இடங்களில் சிக்கித்தவிப்பவர்கள் தமிழகத்திற்குள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல, 48 மணி நேரம் போக்குவரத்து தளர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

கரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனையில் இருப்பவர்கள், அது இல்லை (நெகட்டிவ்) என தெரிய வந்ததும், அவர்கள் விரைந்து வீடு திரும்பி, உரிய பின் தொடர் கிசிச்சைகளை வீடுகளிலேயே தனிமையில் தங்கி மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். அது போல் 19 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை 500 ரூபாய்க்கு வழங்கும் தமிழக அரசின் திட்டம் வரவேற்புக்குரியது.

nakkheeran app

அத்துடன் கிரிமிநாசினி, சோப்பு, கையுறை, முககவசம் ஆகியவற்றையும் தமிழக அரசு வீடு தோறும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும், இரண்டாம் கட்ட நிவாரணமாக ஒரு ரேஷன் அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்தும் தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

அதுபோல் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மீது நடத்தப்படும் வீட்டு வன்முறைகளை தடுக்கும் வகையில் உரிய கவுன்சிலிங் நடத்தவும், அது குறித்த புகார்கள் மீது உரிய துரித நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தேவையான நிதியுதவிகளை தாராளமாக செய்திட முன் வரவேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” என்றுகூறியுள்ளார்.

corona virus MLA Nagapattinam THAMIMUN ANSARI
இதையும் படியுங்கள்
Subscribe