செப்டம்பர் 8 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்கிறார் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.அதாவது தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தவிட்டார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அடுத்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

dmk

Advertisment

Advertisment

பாஜக கட்சி தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும், தமிழக மக்களிடம் பாஜக கட்சியை பற்றி அதிகம் பேச வைத்தவர் தமிழிசை என்று கூறிவந்தனர். தமிழக அரசியல் தலைவர்களில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டவர் தமிழிசை. தமிழக பாஜக தலைவராக இருந்த போது, கட்சி நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை உடனுக்குடன் சமூக வலைத்தளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பாகும். தற்போது கவர்னராக பொறுப்பை ஏற்க உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் இருந்து விலகியுள்ளார்.