Advertisment

மோடி, அமித்ஷாவிடம் புலம்பிய தமிழிசை... ரிப்போர்ட் ரெடி!

சமீபத்தில் 11 மாநில கவர்னர்கள், பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டதாக கூறுகின்றனர். அவர்களுக்கு மோடியும், அமித்ஷாவும் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் தெலங்கானா கவர்னரான தமிழிசைக்கு மட்டும் தமிழகத்தை சேர்ந்த பொலிடிக்கல் மீடியேட்டர் ஒருவர் மூலம் அண்மையில் அப்பாயின்ட்மெண்ட் கிடைத்திருக்கிறது.

Advertisment

bjp

அவர்கள் இருவரையும் சந்தித்த தமிழிசை, தெலங்கானாவில் நான் வேண்டாத விருந்தாளியாகவே பார்க்கப்படுகிறேன் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் தமிழிசை. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறிய மோடியும், அமித்ஷாவும் தற்போது தெலங்கானா ஆட்சி நிர்வாகம் பற்றி ரிப்போர்ட் அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டதாக கூறுகின்றனர். மேலும் தமிழக பா.ஜ.க.வுக்கு அடுத்து யாரைத் தலைவராக நியமிக்கலாம் என்று தமிழிசையிடம் ஒரு சில பெயர்களை கூறி அவர்களை பற்றி கருத்து கேட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

politics governor amithsha modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe