செப்டம்பர் 8 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்றார். அப்போது கவர்னர் பதவியை ஏற்பதற்காக தெலங்கானாவுக்குப் புறப்பட்ட தமிழிசையை, மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் அவர் கூட இருந்தவர்கள், வி.வி.ஐ.பி.க்களுக்கான ஸ்பெஷல் வழியில் அழைச்சிக்கிட் போக முயற்சி எடுத்துள்ளார்கள். ஆனால் அப்போது அங்கிருந்த அதிகாரிகள், தமிழிசை இன்னும் கவர்னர் ஆகவில்லை.

Advertisment

thamilisai

அதனால் அவர் பொது வழியில்தான் விமான தளத்துக்குள் போக முடியும் என்று கூறி, திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு தமிழிசை கவர்னராக பதவியேற்ற நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பி.ஆர்.ஓ. தமிழிசையின் நியமனத்துக்கு எதிராக விமர்சனக் கட்டுரை எழுதியது தெலுங்கானாவில் பெரும் பரபரப்பாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தெலுங்கானா பாஜக கண்டனத்தையும் தெரியப்படுத்தியுள்ளது.