Skip to main content

காரசார விவாதம் - மக்களவையில் இருந்து தம்பிதுரை வெளிநடப்பு

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
t

 

பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு 10 சதவிகிதம்  இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது.    நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இந்த விவாதம் நடைபெற்றது.

 

மக்களவையில் 10% இட ஒதுக்கீடு  மசோதா மீதான விவாதம் நடைபெற்று முடிந்த பின்னர் வாக்கெடுப்பு தொடங்கியது.   இந்த இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்.பி. தம்பிதுரை  மக்களவையில் இருந்து வெளியேறினார்.

 


பொருளாதாரத்தில் பின் தங்கிய பொப்பிரிவினருக்கு 10 சதகிவிதம் இடஒதுக்கீடு அளிக்க வழி செய்யும்  இந்த மசோதா  இடஒதுக்கீடு கொள்கையில் குழப்பம் ஏற்படுத்தும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு என்று கூறி தம்பிதுரை வெளிநடப்பு செய்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அஜித்தின் இந்த உயரத்திற்கு முக்கியக் காரணமே அவர் தான்" - மேடையில் எமோஷனலான இயக்குநர்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

durai speech at thalainagaram 2 audio launch

 

கடந்த 2006ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தலைநகரம் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் துரை இயக்கியுள்ள இப்படத்தில் பாலக் லால்வானி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். 

 

இதில் இயக்குநர் துரை பேசுகையில் படத்தைப் பற்றி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்தார். மேலும், "என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சார். அவர் இப்போது மறைந்துவிட்டார்" எனப் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென எமோஷனலாகி கண்கலங்கிவிட்டார். பின்பு சமாதானமாகி அவருக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரையும் எழுந்து நிற்க கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், "சக்கரவர்த்தி சார் எனக்கு மட்டும் முகவரி கொடுக்கவில்லை. அஜித்துக்கும் தான். அஜித் இந்தளவுக்கு உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்றால் சக்கரவர்த்தி சார் ஒரு மிகப்பெரிய காரணம். அஜித்தை வைத்து பல படங்களைத் தயாரித்துள்ளார். அதற்கு சினிமா மீது சக்கரவர்த்தி சார் வைத்திருந்த காதல் தான் காரணம்" என்றார்.

 

எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அஜித்தை வைத்து ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 


 

Next Story

 ஜெகதீஸ் துரை கொலைக்கு  காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் -  வைகோ வலியுறுத்தல்

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
vaiko1

 

நெல்லை மாவட்டம் பரப்பாடியில் தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ்வரன் கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிக்கை: ‘’நெல்லை மாவட்டம், நான்குநேரி - பரப்பாடி பகுதியில் நள்ளிரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்பட்டு வருகிறது என்றும், அதைத் தடுக்க சம்பவ இடத்திற்கு உடனடியாகப் புறப்பட்டுச் செல்லுமாறும் விஜயநாராயணம் காவல்நிலையத்திலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (06.05.2018) இரவு விஜயநாராயணம் காவல் நிலைய உளவுப் பிரிவு காவலர் ஜெகதீஸ் துரை சென்றுள்ளார். 

 

மணல் கடத்தல் கும்பல் தாக்கியதில் காவலர் ஜெகதீஸ்துரை கொல்லப்பட்டதாக இன்று (07.05.2018) காலை சுமார் 6 மணி அளவில் அவரது துணைவியார் திருமதி மரியரோஸ் மார்க்ரெட் அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

 

காவல்துறையும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனை அருகில் சிந்தாமணி கத்தோலிக்க சபை அருட் தந்தை குழந்தை ராஜன்  தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் சிந்தாமணி சுற்றுவட்டார மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

 

தமிழக அரசும், நெல்லை மாவட்டக் காவல்துறையும், விரைந்து செயல்பட்டு, காவலர் ஜெகதீஸ் துரையின் படுகொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்திட வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் கோரிக்கைகள் எழுத்து மூலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

   கொலையுண்ட 32 வயது நிரம்பிய காவலர் நேர்மையாகப் பணியாற்றக் கூடியவர். அவருக்கு மூன்று வயதில் ஜோயல் என்ற ஆண் குழந்தை உள்ளது. கணவனை இழந்துவிட்ட சகோதரி மரியரோஸ் மார்க்ரெட் 5 மாத கர்ப்பிணி என்பது இதயத்தைப் பிளக்கும் சோகச் செய்தியாகும்.

 

தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், தனது கணவர் காவல்துறையில் உள்ள சில அலுவலர்களாலும், சட்ட விரோத மணல் கடத்தல் கும்பலாலும் பணியின் போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்குக் காரணமான குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அப்பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள சமூக விரோத சக்திகள் கைது செய்யப்பட வேண்டும். தமது கணவர் பணியில் வீர மரணம் அடைந்ததாகக் கருதி, குடும்பப் பாதுகாப்பு நிதி ஒரு கோடி வழங்கிட வேண்டும். எம்.காம்., பி.எட். படித்துள்ள தமக்கு அரசு ஆசிரியை பணி வழங்கிட வேண்டும். தமது மகன் ஜோயல் மற்றும் வயிற்றில் இருக்கும் தமது குழந்தையின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட எழுத்துபூர்வமாக தங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும் எனவும் திருமதி மரியரோஸ் மார்க்ரெட் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

 

காவலர்  குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் அறிவித்த 10 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை ஏற்கத்தக்கது அல்ல, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட உத்தரவிட வேண்டும்.


  கணவரைப் பறிகொடுத்த இளம் விதவை திருமதி மரியரோஸ் மார்க்ரெட் தெரிவித்துள்ள கோரிக்கைகள் முழுவதையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க., சார்பில் வலியுறுத்துகிறேன்.

’’