Skip to main content

சீனியர் எம்.பி.க்கு எதிராக அப்பாவை களம் இறக்கி எம்.பியை சிக்க வைத்த அமைச்சர்

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

 

ஆளும் தமிழக அரசின் எம்.பி.களில் சீனியராக இருப்பவர் தம்பிதுரை. இவர் பிஜேபிக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே வந்தார். இதனால் இவரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டுயிருந்தனர் எடப்பாடியும், பன்னீர் செல்வமும். இந்த நிலையில் சுகாதரதுறை அமைச்சர் இருக்கும் சட்டமன்ற தொகுதி கரூர் எம்.பி. தொகுதிக்குள் வருவதால், தீடிர் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய அப்பாவை தீடீரென கரூர் எம்.பி. தொகுதிக்கு விருப்பமனு கொடுக்க வைத்து பரபரப்பை உண்டாக்கினார். 
 

தனக்கு எதிராக தன் அப்பாவை களம் இறக்கிய அமைச்சர் மீது எம்.பி. செம்ம கடுப்பில் இருந்தார். அதனால் தொகுதிகளில் மக்கள் குறைகளை கேட்டு தொடர் சுற்றுபயணம் செய்து வரும் தம்பிதுரை, இந்த முறை விஜயபாஸ்கர் தொகுதியில் அமைச்சர் இல்லாமல் சென்றதால் ஆங்காங்கே மறியல், வாக்குவாதம் என மக்களிடம் வசமாக சிக்கி தவித்தார் எம்.பி. 

 

Thambi Durai


 

கரூர் எம்.பி தொகுதியில் மொத்தமாக 6 சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. கரூர் எம்.பி. தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக இருப்பவர் தம்பிதுரை. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அத்தொகுதியில் எம்.பியாக இருந்து வருகிறார். வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தம்பிதுரையும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
 

ஆனால் கடந்த சில மாதங்களாகவே தினமும் கரூர் எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு தினமும் அந்த அந்த மாவட்ட அதிகாரிகளுன் சென்று மக்களின் குறைகளை கேட்டு வருகிறார். 
 

Thambi Durai


 

இந்நிலையில் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவான விஜயபாஸ்கர் இல்லாமலேயே அவரது தொகுதியில் மக்களவை துணை சபாநாயகர் பொதுமக்களை சந்தித்துள்ளார். விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள ராஜாளிபட்டி, நம்பம்பட்டி, தேங்காய்தின்னிபட்டி, கசவனூர், வாரகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் சென்று கோரிக்கை மனுக்களை தம்பிதுரை பெற்றார். அவர் செல்லும் பல கிராமங்களில் குடிநீர் கேட்டு மக்கள் அவரிடம் முறையிட்டனர். தேங்காய் தின்னிபட்டியில் குடிநீர் கேட்டும்,100 நாள் வேலை முறையாக வழங்கவில்லை என குற்றம்சாட்டியும் மக்கள் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 

விராலி மலை. இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கர். இவரது தந்தையான சின்னதம்பி மக்களவை தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே பலமுறை விராலி மலைக்கு, அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்று குறைகளை கேட்டுள்ள தம்பிதுரை, தற்போது விஜய பாஸ்கர் தொகுதியில் அவர் இல்லாமலேயே மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளார். விஜய பாஸ்கரின் தந்தையும் கரூர் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிருஷ்ணகிரி வெடி விபத்து; மத்திய அமைச்சர் விளக்கம்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Krishnagiri fire incident Explanation of the Union Minister

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை என்ற இடத்தில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 15 பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்தப் பட்டாசு குடோனில் கடந்த 29 ஆம் தேதி காலை 10 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகிலிருந்த 3 வீடுகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரூத்திகா, மகன் ரூத்திஸ், பட்டாசுக் கிடங்கு அருகிலிருந்த உணவகத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

மேலும் சம்பவம் நடந்த இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்ததோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் அவரது குழுவினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை நகரம், நேதாஜி ரோடு போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்ச ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டு இருந்தார்.

 

Krishnagiri fire incident Explanation of the Union Minister

 

இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி, தம்பிதுரை இந்த விபத்து குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பதிலளிக்கையில், “கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்திற்கு சிலிண்டர் வெடித்தது காரணமல்ல. சிலிண்டர் தானாக வெடிக்காது. குடியிருப்பு பகுதியில் பட்டாசு கடை இருந்ததே விபத்திற்கும், 9 பேர் உயிரிழப்பிற்கும் காரணம். வெடி விபத்து ஏற்பட்ட ஓட்டல் இருந்த பகுதிக்கு சமையல் சிலிண்டர் விநியோகமே செய்யப்படவில்லை” என பதிலளித்தார்.

 

 

Next Story

“அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும்” - தம்பிதுரை 

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

“Minister Senthil Balaji should resign” - Thambidurai

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகளை யாருக்கு மாற்றுவது என்பது குறித்து திமுக மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

 

அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை தற்பொழுது நிதித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தங்கம் தென்னரசுவிற்குக் கூடுதல் துறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையைத் தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அதிமுக மாநிலங்கள் அவை எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தது தொடர்பாகப் பேசினார். அப்போது அவர், “ஒரு முதல்வர் இன்னொரு முதல்வரை சந்தித்துள்ளார். திமுக ஆட்சியில் யார் முதல்வராகவும், யார் நிழல் முதல்வராகவும் செயல்படுகிறார்கள் என அவர்கள் அனைவருக்கும் தெரியும். செந்தில் பாலாஜி தார்மீகப் பொறுப்பேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வது தான் சிறந்தது” என்றார்.