Advertisment

“மறுபடியும் ரஜினியை வைத்து சொல்லச் சொல்லவா” - சீமான்

publive-image

இந்தியாவில் விடுதலை போரில் பங்கேற்காத ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Advertisment

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “காஷ்மீரில் இருக்கும் முஸ்லீம்களை என்னுடன் இரு என்று சொல்லுகிறீர்கள். இங்கு இருக்கும் முஸ்லீம்களை பாகிஸ்தானுக்குப் போக சொல்லுகிறீர்கள். நீங்க எல்லாரும் பைத்தியமா. பங்களாதேஷ் பாகிஸ்தானில் இருக்கும் இன்றைய இஸ்லாமியர்கள் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்கள். விடுதலை போராட்டத்தில் பங்கேற்காத ஒரே இயக்கம் இந்தியாவில் ஆர்எஸ்எஸ்.

Advertisment

பிரதமர் மோடி திட்டங்களைத்துவக்கி வைத்து இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்லுவதாக குறிப்பிடுகிறார். ஆட்சிக்கு வந்து எட்டு வருடங்கள் பின் இப்படி சொன்னால் பரவாயில்லை. தொடக்கத்தில் இருந்தே இப்படிதான் பேசிவருகிறார். பிரதமர் மோடியின் பொய்கள் என்று புத்தகம் இருக்கிறது. தயவு செய்து அதை வாங்கி படியுங்கள்.

தமிழ் சினிமாவில் இப்பொழுது பேசு பொருளாக இருப்பது இந்துவா இல்லையா என்பது. இது யாரை பிளவுபடுத்துகிறது. நீங்கள் இந்துவாக இருதால் இருங்கள். நான் சைவனாக இருக்கிறேன். இந்து மதம் என்பது பல மதங்களின் கூட்டு. அதில் நான் யாரென்று நான் தானே சொல்லனும். நீங்கள் ஏன் சொல்லுகிறீர்கள்.

நான் வீர சைவன் என்று சொன்னால் கோபப்படுகிறீர்கள். அதுவே மன்னன் படத்தில் ரஜினிகாந்த் “நாங்கள் ராஜராஜ சோழன் வம்சம் வீர சைவன்” என பட்டையை போட்டுக்கொண்டு வந்து சொன்னால் கைதட்டுகிறீர்களே. மறுபடியும் பட்டையை போட்டு அவரை வைத்து ஒரு தடவை சொல்ல சொல்லவா” எனப் பேசினார்.

rajini seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe