telephone conversation edappadi palaniswami and congress leader rahul gandhi

Advertisment

பா.ஜ.க.வுடன் நெருக்கமாகவும், அதனுடன் கூட்டணியாகவும், இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் ரகசியமாக பேசிய விசயம் அம்பலமாகியிருக்கிறது! இந்த ரகசிய பேச்சை அறிந்து எடப்பாடி மீது செம காட்டமாக இருக்கிறது பா.ஜ.க. தலைமை!

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையை உருவாக்கி, அதனை தனதாக்கி பொதுச்செயலாளராக அமர வேண்டும் என திட்டமிட்டார் எடப்பாடி. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ்.சை கட்சியிலிருந்தே தூக்கி எறியவேண்டி அனைத்தையும் செய்து முடித்தார் எடப்பாடி. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவினால் அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்திற்கிடையே, ராகுல்காந்தியிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி. அரசியல் தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில், எடப்பாடியின் நண்பர். இவரிடம் அடிக்கடி ஆலோசனை கேட்டு வருகிறார். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட விவகாரங்களைத் தொடர்ந்து அண்மையில் எடப்பாடியைச் சந்தித்தார் சுனில். அப்போது அரசியல் ரீதியாக பல விசயங்களை அலசியுள்ளனர். இதனையடுத்து, ராகுல்காந்தியை சந்தித்த சுனில் தனது ஃபோனிலிருந்து எடப்பாடியை தொடர்புகொண்டுள்ளார். தொடர்பு கிடைத்ததும், எடப்பாடி பழனிசாமியிடம் அவர் பேசிவிட்டுஃபோனை ராகுலிடம்கொடுத்துள்ளார் சுனில்.

Advertisment

telephone conversation edappadi palaniswami and congress leader rahul gandhi

ஃபோனை வாங்கிய எடப்பாடி, ராகுலிடம் நலம் விசாரித்ததோடு, விசாரணை என்ற பெயரில் ராகுல்காந்தியை அமலாக்கத்துறை தொந்தரவு கொடுப்பதைச் சொல்லி பா.ஜ.க.வை எதிர்மறையாக விமர்சித்துள்ளார். ராகுலுக்கும் எடப்பாடிக்குமான ஃபோன் உரையாடல் 5 நிமிடம் நடந்துள்ளது. ராகுல் கொடுத்த தைரியம் எடப்பாடிக்கு உற்சாகப்படுத்தியுள்ளது.

அதன்பிறகு, ராகுலிடம் சுனில் சிறிது நேரம் பேசிவிட்டு தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். ராகுலிடம் எடப்பாடி பேசிய விவகாரத்தை அடுத்த 48 மணிநேரத்தில் மோப்பம் பிடித்த உளவுத்துறை, அதனை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியப்படுத்தியிருக்கிறது. இதனை அறிந்து செம காட்டமாகியிருக்கிறார் நரேந்திர மோடி!

Advertisment

இந்த நேரத்தில் தான், பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வர... மேல்முறையீடு செய்யுங்கள் என்று ஓ.பி.எஸ்.சுக்கு டெல்லியில் இருந்து தகவல் வந்தது. இதனையடுத்து சுறுசுறுப்பான ஒபிஎஸ் டீம், அவசரம் அவசரமாக மனு தயாரித்து நள்ளிரவில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு தாக்கல் செய்தது. அதில் ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாகவும், எடப்பாடிக்கு எதிராகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், பொதுக்குழுவைப் புறக்கணிக்க முடிவு செய்திருந்த ஓ.பி.எஸ்.சுக்கு, டெல்லி கொடுத்த யோசனையின்படி கலந்துகொண்டார் என்கிறார்கள். பொதுக்குழுவின் இடையில் வெளிநடப்பு செய்த ஓ.பி.எஸ். டெல்லிக்கு சென்றிருக்கிறார்.

எடப்பாடி- ராகுல் குறித்து விசாரித்தபோது, "ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என ராகுல் கேட்டுக்கொண்டார். இதைத்தாண்டி எந்த ரகசிய அரசியலும் கிடையாது" என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.