Advertisment

டீ வியாபாரி மோடி? உண்மையை உடைத்த பிரவீன் தொகாடியா!

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் நரேந்திர மோடி. குஜராத் மாடலாக அடையாளம் காட்டப்பட்ட மோடி, இந்தியாவையும் குஜராத்தைப் போல நம்பர் ஒன் நாடாக ஆக்கிக்காட்டுவார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

Advertisment

Modi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

வெளிநாட்டு கட்டடங்களை போட்டோஷாப் செய்து குஜராத் என்று நம்ப வைத்தார்கள். ஊழல் இல்லாத ஆட்சியை செய்துதருவதாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விளம்பரங்களை வெளியிட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் இளமைக் காலத்தில் டீ விற்றார் என்றும், கட்ட பிரம்மச்சாரி என்றும் பிரச்சாரம் செய்தார்கள்.மோடி ஒரு கட்ட பிரம்மச்சாரி என்று சொன்னது முழுமையான உண்மை கிடையாது என்பது, அவரது இளம் வயது மனைவி யசோதா பென் பொதுவெளியில் தோன்றியபோது அம்பலமானது. தற்போது, மற்றொரு பொய்யும் அம்பலமாகி இருக்கிறது. ஆம், அவர் ஒரு டீ வியாபாரி என்று சொன்னதெல்லாம் பொய்யாம்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

கரசேவகராக மோடி தன் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் இருந்து, அவரது நண்பராக இருந்தவர் பிரவீன் தொகாடியா. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவராக செயல்பட்ட இவர், அந்தராச்சாரியா ஹிந்து பரிஷத் என்ற அமைப்பை நடத்திவருகிறார். அவர் கூறுகையில், கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக ஒரு நண்பராக மோடியை எனக்கு நன்றாக தெரியும். அவர் டீ விற்றதாக நான் எந்தக் காலமும் கேள்விப்பட்டதில்லை. ஒரு அனுதாபத்தை உருவாக்க இப்படி கிளப்பி விட்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

அதேபோல், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டாது என்றும், அதைச் செய்துவிட்டால் அவர்களுக்கு செய்வதற்கு இங்கு அரசியல் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

politics praveen togadia Narendra Modi
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe