தமிழகத்தில் 9 மாவட்டங்கள் நீங்கலாக கிராம அளவில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது.

Advertisment

camara

இந்த நிலையில், நடைபெற இருக்கின்ற 2019 தமிழக உள்ளாட்சி தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கேமரா (புகைப்படக் கருவி) சின்னத்தை பொது சின்னமாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக் தலைவர் தி.வேல்முருகன் மற்றும் அக்கட்சியின் வேட்பாளர்கள் இதே சின்னத்தில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.