Skip to main content

EIA 2020 ஆய்வுக் குழு அமைத்துள்ள தமிழக அரசு...

Published on 14/08/2020 | Edited on 14/08/2020

 

tamilnadu sets a committee to evaluate eia 2020

 

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்யும் வகையில் 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 

 

கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு கொண்டுவந்த சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை 2020, நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகளைப் பெற்று வருகிறது. தமிழகத்திலும் இதற்கான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வரைவு குறித்து ஆய்வு செய்யக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 12 பேர் கொண்ட இந்தக் குழுவில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர், பொதுப்பணித்துறை தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரிய வழக்குகளின் விசாரணை தள்ளிவைப்பு!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020


 

chennai high court EIA draft tamil languages union government

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரிய வழக்குகளின் விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம், ஆறு வாரங்களுக்குத்  தள்ளிவைத்துள்ளது.

 

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, தமிழில் வெளியிடக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மீனவர் அமைப்பைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

 

அப்போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, 22 மொழிகளிலும் வெளியிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு வரும் 23-ஆம் தேதிக்கு  தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

மேலும்,  கர்நாடக உயர்நீதிமன்றம், வரைமுறையற்று விதித்த தடையை நீட்டித்து உள்ளதாகவும், மறு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட உள்ளதால், இந்த வழக்குகளையும்  தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரினார்.

 

இதே கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேலும் இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என,  மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

 

இதை ஏற்று, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேலும் இரு வழக்குகளையும், இந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்குகளின் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. 
 

Next Story

"சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையானது தனியார் மயமாக்க வழி வகுக்கிறது"- மு.க.ஸ்டாலின்!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

eia video conference dmk mk stalin speech

 

 

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,"சூழலியலைத் தகர்க்கும் சட்டம்" என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை- 2020 குறித்த கருத்தரங்கம் காணொளி வாயிலாக நடைபெற்றது.

 

eia video conference dmk mk stalin speech

 

 

இக்கருத்தரங்கில், மூத்த பத்திரிகையாளர் 'இந்து' என்.ராம், வழக்கறிஞர் ரித்விக் தத்தா, சூழலியல் செயற்பாட்டாளர்கள் லியோ சல்தான்ஹா மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இவர்களோடு, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வின் செய்தித்தொடர்பாளர்கள் இந்தக் காணொளி நிகழ்வில் பங்கேற்றனர்.

 

 

eia video conference dmk mk stalin speech

 

 

இந்த காணொளி கருத்தரங்கில் பேசிய தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், "மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்கள் நலனுக்கு விரோதமானவை. திட்டங்கள், தொழிற்சாலைகளை தி.மு.க. எதிர்க்கவில்லை. சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் இருக்கக்கூடாது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கை அமலானால் மக்கள் விரோத திட்டங்கள் பற்றி கேள்வி கேட்க முடியாது. ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்கள் பற்றி கேள்வி கேட்க முடியாது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையானது தனியார் மயமாக்க வழி வகுக்கிறது" என்றார்.