தமிழகம் உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது. திமுக மற்றும் அதிமுகவில் தலா 3 ராஜ்யசபா சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

Advertisment

tamilnadu  rajya sabha mps election interest in dmdk party

இந்த நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு இரண்டு நாட்களில் முதல்வரை சந்திக்க உள்ளோம். சிஏஏ நாட்டிற்கு நலன் என்றால் வரவேற்போம்; பாதிப்பு என்றால் எதிர்த்து குரல் கொடுப்போம். எந்த மதத்திற்கும் சிஏஏ எதிரானது அல்ல என்று மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.