ப.சிதம்பரத்தை போலவே தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், தமது இலவச இணைப்பில் உள்ள ஒரு கட்சியை கழற்றி விடுவது திமுகவுக்கு நல்லது என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருக்கும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறியுள்ளார்.

bjp

Advertisment

Advertisment

அதில் இந்திய முழுவதும் 5 பேர் மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளனர். அதில் இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் சிதம்பரம் கைதாகி சிறையில் இருப்பது போல் அந்த இரண்டு அரசியல்வாதிகளும் விரைவில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அஸ்வின்குமார் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது. இதனால் எதிர்கட்சிகளை பழிவாங்கும் போக்கிலும், மிரட்டும் நிலையிலும் பாஜகவினர் பேசி வருவது அரசியல் கட்சினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர்.