Advertisment

புதிய கட்டுப்பாட்டுடன் டாஸ்மாக் கடைகள் திறக்க திட்டமா? வெளிவந்த முக்கியத் தகவல்!

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நான்காவது முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (14/04/2020) உரையாற்றினார். கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், ஏழைகள், தினக்கூலித் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வரும் பகுதிகளில் ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், "மக்கள் நலனே முக்கியம் என்பதால் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

tasmac

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (15/04/2020) வெளியிட்டுள்ளது. அதன் படி ஏப்ரல் 20- ஆம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைப்பொருள், கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பிறகு எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர், மெக்கானிக் தொழில் செய்வோருக்கு அனுமதி. சிறு, குறு தொழில் ஈடுபடுவோர் பணிகளைத் தொடரலாம். முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி. 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிகளைத் தொடரலாம். விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள், பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம் வசூலிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் மக்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடியுள்ளதால் டாஸ்மாக் கடைகளில் திருடுவது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதோடு டாஸ்மாக் கடைகள் மூடியுள்ளதால் தமிழக அரசுக்குப்பெரிய அளவில் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை அரசு கருத்தில் கொண்டு புதிய நேரக் கட்டுப்பாட்டுகள் மற்றும் ஒரு சில விதிமுறைகளின் படி டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், ஏப்ரல் 30-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு கூறியுள்ளது குறிப்படத்தக்கது.

Advertisment
admk coronavirus eps minister politics TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe